நம்மை சுற்றிப் பார்க்கும் பொழுது, செடிகள் மழைக்கு பின் ஏன் பளபளக்கின்றன, வானவில் ஏன் வில்லின் வடிவை கொண்டுள்ளது, பட்டாம்பூச்சிக்கு அதன் வண்ணத்தை தருவது எது, அல்லது விண்மீன்கள் ஏன் மின்னுகின்றன என்று எண்ணயிருப்போமா? இச்சம்பவங்களிற்கான காரணத்தை அறிந்தபின், தன்னை சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளை பற்றிய ஒரு மனிதனின் வெளிப்பார்வை மாறுபட்டு, அவனை மேலும் விசாரிக்க தூண்டுகிறது. இந்த பிளாகின் மூலம் நாங்கள், உங்கள் அனைவரையும் பெரும்பரப்புள்ள பிரபஞ்சத்திற்குள்ளும், கண்களுக்கு தென்படாத அணு போன்ற பொருள்களுக்குள்ளும் , அழைத்துச்சென்று அணுக்களுடன் விளையாடியும், எண்கள் கூறும் கதைகளை கேட்டும் அறிவியலை கொண்டாடுவோம்.

ஆங்கிலத்தில் படிக்க...

Monday, February 1, 2010

உயிருள்ள நிறங்கள் (Live Colours)

இருக்கும் இடத்திலிருந்து இவ்வுலகை பார்க்கும் பொழுது, கண்ணிற்க்கெட்டிய வரையில் ஆயிரக்கணக்கான நிறங்களை இயற்கையில் நம்மால் காணமுடிகின்றது - இலைப்பச்சை, மஞ்சள்  நிறப்பூக்கள், பல்வண்ணப்பட்டாம்பூச்சிகள், மீன்கள், இன்னும் எவ்வளவோ.. நம்மால் காணமுடிகின்ற இந்த வர்ணஜாலத்தை மனிதனின் கைஆற்றலால் ஏற்பட்ட எந்த ஒரு ஓவியத்திலோ வண்ணப்படத்திலேயோ காண முடிவதில்லை. ஏன்? ஓவியக்காவியங்களை படைக்கும் ஆற்றலைக்கொண்ட நம் கைகளால் இயற்கையின் ஒப்பற்ற நிறக்கலவைகளை ஏற்படுத்தும் இந்த பண்பாட்டிற்கு ஏன் ஈடு கொடுக்க முடிவதேயில்லை?

இதற்குண்டான காரணம் உயிரினங்களுள்ளேயே அடங்கியிருக்கிறது. பாரெங்கும் காணப்படும் ஒவ்வொரு உயிரினத்தையும் நாம், உறுப்புகளின் வடிவாய் உறுப்புகளினுள்ளே இருக்கும் திசுக்களின் வடிவாய் இந்த திசுக்களினுள்ளே இருக்கும் உயிரணுக்களின் வடிவாகவும் நாம் காண முயன்றோமானால், இவ்வுயிரணுக்களளவில் சில மூலக்கூறுகள் வண்ணத்தை வெளியிடக்கூடிய ஆற்றலை கொண்டவை என்பதை அறியலாம். ஆங்கிலத்தில், இந்த மூலக்கூறுகளிற்கு பெயர் ‘க்ரோமாடோஃபோர்’. இந்த மூலக்கூறுகள் சூரிய ஒளியில் இருக்கக்கூடிய ஒரு வண்ணத்தை தவிர மற்ற எந்த ஒரு வண்ணத்தையும் பிரதிபலிப்பதில்லை. பிரதிபலிக்கப்படாத ஒரு வண்ணத்தை மட்டும்தான் நம்மால் அந்த பொருளின் வண்ணமாக காணமுடிகின்றது. இந்த ஆற்றல் நம் கண்களுடையதாகும்.

தாவரங்களிலுள்ள பலவகையான க்ரோமாடோஃபோர்களில் ஒன்றுதான் ‘க்லோரோஃபில்’. இது உயிரணுவிலுள்ள பல அறைகளில் ஒன்றான ’க்லோரோஃப்ளாச்ட்’ எனும் அறையினுள் உள்ளதாகும். க்லோரோஃபில் சிகப்பு மற்றும் ஊதா ஒளிக்கதிர்களை விழுங்கி பச்சையை மட்டும் வெளிப்படச்செய்யும். க்லோரோஃபில் சூரிய ஒளியை உள்வாங்கி, அதில் உள்ள சக்தியை பயன்படுத்தும் தன்மையே தாவரத்தின் உயிரோட்டத்தின் காரணமாக அமைகிறது.  க்லோரோஃபில்லைத்தவிர மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணத்தை கொடுக்கும் ‘கரோடிநாய்ட்ஸ்’ என்னும் அணுக்கள் தாவரத்தில் காணமுடியும். பல்வகை கரோடிநாய்ட்ஸில் ஒன்றுதான் ‘க்ஸான்தோஃபில்’ எனும் மூலக்கூறு. இது                க்லோரோஃபில்லால் உள்வாங்க முடியாத நீல நிறக்கதிர்களை உள்வாங்கிக்கொண்டு, அதில் உள்ள சக்தியை பயன்படுத்தும்விதம் அது க்லோரோஃபில்லிற்கு உதவுகிறது. இதைப்போல் கருப்பு திராட்சையில் உள்ள ‘ஆந்தோசயனின்’ அப்பழத்திற்க்குண்டான நிறத்தை ஏற்படுத்துவதுமட்டுமில்லாமல் திராட்சையை உட்கொள்வோற்கு உடல்நலத்தையும் தருகிறது.

விலங்கினங்களில் உள்ள பல்வகையான உயிரணுக்களில் ஒன்றானது ‘மெலானோசைட்’. மெலானோசைட்டுகள் ‘மெலானின்’ என்ற மூலக்கூறை உண்டாக்குகின்றன. இந்த மூலக்கூறு மனிதனின் தோல், கண்ணின் ‘ஐரிஸ்’, பறவைகளின் இறக்கைகள் போன்ற உறுப்புகளிள் உள்ளது. இந்த மூலக்கொறின் இல்லாமைதான் ‘ஆல்பினிசம்’ எனப்படும் தோல்வெண்மை நிலமைக்குக் காரணம்.

நம்மால் காணமுடிகின்ற வண்ணங்களுக்குக்காரணமாக இருக்கும் இந்த மூலக்கூறுகள் பலவகைகளில் கூடும் அடிப்படையிலும், அவ்வாறு கூடும் அளவின் அடிப்படையிலும் நிறக்கலவைகள் உண்டாகுகின்றன.

க்ரோமாடோஃபோர்களின்மேல் விழும் கதிர்கள் எப்பொழுதும் வெள்ளைநிற ஒளியே (சூரிய ஒளி உள்பட), ஆனாலும் அதிலிருந்து வெளிவரும் ஒளியைமட்டுமே அந்த க்ரோமாடோஃபோர்களைக் கொண்ட உயிரணுக்களின் நிறமாக நாம் காண்கிறோம். இது எப்படி சாத்யம்? இதற்கு பதில் ஒளியின் சக்தியில் அடங்கியிருக்கிறது. வான்வில்லில் ஏழு வண்ண்ங்களை காண்கின்றோம். அதில் ஒவ்வொன்றிர்க்கும் ஒரு சக்தி அளவு உன்டு. இதில் ஊதாவிற்கு மிக அதிக சக்தி. சிகப்பிற்கு மிக குறைன்த சக்தி. நீலம், பச்சை மற்றும் மஞ்சள் ஆகிய னிறன்ங்கள் இதற்கு இடைப்பட்ட சக்திகளைகொண்டுள்ளன. க்ரோமாடோஃபோர்களின்மேல் விழும் ஒளிக்கதிர்களின் சக்தி சிறிதளவு அதன் அணுக்களை தூன்டும் விதம் தொலைந்து போய்விடுகின்றன. இலயின்மேல் சூரியஒளி விழும்போது, அதிலுள்ள மூலக்கூறுகள் ஊதா மற்றும் நீலம் நிறங்களின் சக்திகளைக்கொண்டு தூண்டப்பட்டு பச்சைக்குண்டான சக்தியை மட்டும் வேளியேறச்செய்கின்றன. இதனால்தான் இலை பச்சையாகக் காணமுடிகிறது. இதைப்போலவேதான் எல்லா உயிரணுக்களும் அவைக்குறிய வண்ணங்களைக்கொண்டதாக நம்மால் காணமுடிகிறது.

இந்த பண்பாடு உயிரற்ற பொருட்களுக்கும் உண்டு! இதனால்தான் நம் பார்வைக்கு பொருள் உள்ளது. ஒரு பொருளிலிருந்து இன்னொன்றைக்கண்டறிந்து பாகுபாடும் செய்ய முடிகிறது.

எழுதியவர்: ஸ்னேஹா
மொழிபெயர்ப்பாளர்: கார்த்திக் 

No comments:

Post a Comment