நம்மை சுற்றிப் பார்க்கும் பொழுது, செடிகள் மழைக்கு பின் ஏன் பளபளக்கின்றன, வானவில் ஏன் வில்லின் வடிவை கொண்டுள்ளது, பட்டாம்பூச்சிக்கு அதன் வண்ணத்தை தருவது எது, அல்லது விண்மீன்கள் ஏன் மின்னுகின்றன என்று எண்ணயிருப்போமா? இச்சம்பவங்களிற்கான காரணத்தை அறிந்தபின், தன்னை சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளை பற்றிய ஒரு மனிதனின் வெளிப்பார்வை மாறுபட்டு, அவனை மேலும் விசாரிக்க தூண்டுகிறது. இந்த பிளாகின் மூலம் நாங்கள், உங்கள் அனைவரையும் பெரும்பரப்புள்ள பிரபஞ்சத்திற்குள்ளும், கண்களுக்கு தென்படாத அணு போன்ற பொருள்களுக்குள்ளும் , அழைத்துச்சென்று அணுக்களுடன் விளையாடியும், எண்கள் கூறும் கதைகளை கேட்டும் அறிவியலை கொண்டாடுவோம்.

ஆங்கிலத்தில் படிக்க...

Monday, February 1, 2010

"வைரச்" (Viruses)


மழைக்காலங்களில் "வீட்டிற்க்குள்ளே வா, மழையில் நனைன்து என்ன விளையாட்டு வேண்டியிருக்கு?" என்று அம்மா பிள்ளைகளை திட்டுவதும் பின்னர் நனைன்து விளையாடிய குழந்தைகளுக்கு சளி, மாரடைப்பு, ஆகியவை வருவதும் வழக்கம் தான். இந்த உடலுளைச்சல்களை ஏற்படுத்துவது எது? "கிருமிகள்" என்று நமக்கு தெரியும். இந்த கிருமிகளில் மிகச்சிறியவை "வைரச்" எனப்படுபவை.

வைரச் என்றால் லத்தினில் விஷமென்று பொருள். வைரசுகளிள் பலவகை உண்டு. சளியை ஏற்படுத்துவது  "ரைனோவைரச்" மற்றும் "கோர்னாவைரச்". இதைப்போன்றே கோடைக்காலத்தில் வரும் அம்மைக்கு காரணம் "வாரிசெல்லா-சாச்டர் வைரச்". சமீபத்தில் இவ்வுலகை ஆட்டிப்படைத்த "சுவைன் ஃப்ளு", "எச்1என்1" வைரசால் ஏற்படுவதாகும். வைரசுகளின் மிக முக்கியமான பண்பாடு அவை பிற உயிரிநங்களினுள்ளேதான் உயிருள்ளதாக தோன்றுகின்றன. அதாவது, ஒரு வைரச் ஒரு தாவரத்தையோ அல்லது ஒரு ப்ராணியையோ தாக்கும்வரை உயிற்ற ஒரு அணுக்கூடலாகதான் இருக்கும். காற்றிலோ தண்ணீரிலோ பரவிக்கொண்டிருக்கும்பொழுது ஏதாவது ஒரு உயிரின்த்தை சந்திக்க நேர்ந்தால், அதற்க்கு உயிர் தோன்றி, அந்த உயிரினத்துள் ஊடுரவி அதன் அட்டகாசத்தை ஆரம்பித்துவிடும். இது எப்பதி சாத்யம்? இதற்கு பதில் வைரசின் அமைப்பில் தெரியவருகிறது.

"காப்சிட்" எனும் புரதத்தினாலான ஒரு பெட்டிகுளடைந்த மறபணுக்களைக்கொண்ட பெரும்மூலக்கூறுகள்தான் வைரச். இதன் அமைப்பு இவ்வளவு எளிமையாக இருப்பதால்தான், உயிரற்ற நிலயிலிருந்து இயல்பாக பிற உயிரினங்களின்மேல் விழுந்ததும் அவ்வுயிரணுவின் சதையை பிளந்து, உள்ளே புகுந்து, அதனால் உயிர் பெற முடிகிறது. "எய்ட்ச்" எனும் கொடூர நோயை ஏற்படுத்துகிற வைரசில் காப்சிடின் வெளியேயும் இன்னொரு புரதச்சுவர் உள்ளது. இன்த "என்வலப்" வெரும் வைரசின் தற்காப்பிற்க்கு மட்டுமெ, இதற்கு உயிரோட்டம் கிடையாது.

காய்ச்சலை ஏற்படுத்தும் வைரசுகள் உயிரணுக்களினின்மையில் மூன்று மணிநேரத்திற்குமேல் இனப்பெருக்கம் செய்ய இயலாமல் உயிரை துலைத்து விடுகின்றன. இதே உயிரணுக்களின் அண்மைமட்டும் கிடைக்கட்டுமே, உடன்  அந்த உயிரணுவின் புரதச்சுவரை துளைத்து, தன் புரதச்சுவரை இழன்து, மறபணுக்களைக்கொண்ட பேர்மூலக்கூற்றை உயிரணுக்களிணுள் செலுத்தி, அவையின் எண்ணைப்பெருக்கி, மிகக்குறைந்த நேரத்தில் வைரசுகள் இனப்பெருக்கத்திற்குண்டான அத்தனை வேலையையும் செய்து முடித்து விடுகின்றன. இதைவிட சிறப்பு வைரச் அது தாக்கும் உயிரணுக்களின் எதிர்ப்பு சக்தியை எதிர்க்கொள்ளும் விதம் தான். வைரசுகளின் மறபணுக்களைக்கொண்ட பேர்மூலக்கூறுகள் மிகக்குறைந்த நேரத்தில் தம் பண்பாட்டினை மாற்றிக்கொள்ளும் விதம் எதிரி சக்திகள் மாறும் வேகத்தை சந்திக்கும் விதம் அமைந்திருகின்றன. வியப்பூட்டுமிந்த பண்பாடு எப்படி சாத்யம்? இதற்கு வைரசின் எளிமயான அமைப்பும் அது தாக்கும் உயிரணுக்களின் இயல்பை கட்டுப்படுத்தும் தன்மைதான் காரணம்.

உயிரணுக்களின் இயல்பை கட்டுப்படுத்தும் தன்மை வைரசுகளுக்கு எப்படி வந்தது? ஓருயிரணுவை துளைக்கும்பொழுது, வைரசுகள் தம் புரதச்சுவரை விட்டுவிட்டு, மறபணுக்களைமத்தும் உயிரணுவினுள்ளே செலுத்துகிறது. பின், தம் புரதங்களைக்கொண்டு அவ்வுயிரணுவின் இயல்பான செயல்பாடுகளை தன்வசப்படுத்திக்கொண்டு தம் இனப்பெருக்கத்திற்காக உபயோகப்படுத்திக்கொள்கிரது. இதனால் உயிரணுக்கள் தம் மறபணுக்களின் நகல்களை ஏற்படுத்தும்பொழுது, தாக்கியிருக்கும் வைரசுகளின் மறபணுக்களின் நகல்களையும் ஏற்படுத்தவேண்டிய கட்டாய சூழ்நிலை. இந்த சம்பவங்கள் வைரசுகளின் மறபணுக்கள் உயிரணுக்களின் மறபணுக்களோடு ஒன்றிய்ப்போய்விட்ட பிறகும் நடைபெறலாம். இது ஆங்கிலத்தில் "இன்டெக்ரேசன்" என்று கூறப்பெருகிறது. இதற்கு தடயம் மனிதனின் மறபணுக்களிலேயே உண்டு.

வைரசுகளின் பாகுபாட்டை ("டாக்சானமி") குறித்து சர்வதேசக்குழுவொன்றின் எட்டாவது அறிக்கையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இனங்களைச்சேர்ந்த ஐயாயிரத்தி ஐநூற்றி நாற்பதிற்கும் மேற்பட்ட வைரசுகள் உள்ளனயென்று அறிவிக்கப்பட்டுள்ளது. வைரசுகள் தம்மைவிட சிரிதே பெரிய பிரமாணங்களை கொண்ட "பாக்டீரியா"எனும் கிருமியிலிருன்து, தாவரங்கள், விலங்கினங்கள், மனிதனுள்பட எல்லா உயிரினங்களையும் தாக்குகிறது. பாக்டீரியாவை தாக்கும் வைரசுகளின் பெயர் "பாக்டீரியோஃபாச்"ஆகும். கடற்ப்பாசிகளை தாக்கும் வைரசுகள்("சயானோஃபாச்"), அப்பாசிகளின் சுவாசக்காற்று மேன்மையடைகிறது. 

ஆக, வைரசுகளால் பயனுமுண்டு நம்மை பொருத்தவரை பல இன்னல்களுமுண்டு என்பது நமக்கு தெளிவாகிறது. எப்பொழுதும் உயிரின்மையின் விளும்பிலிருக்கும் வைரசுகள் ஒரு விதையைப்போல், சரியான சூழ்னிலையை அடைந்து, உயிர்பெற காத்துக்கொண்டிருக்கின்றன. உயிரற்ற பொருள்போல் தென்பட்டாலும், அதனுள்ளே உயிர்பெரும் சக்தி கட்டாயமாக உள்ளதென்பதில் ஐய்யமில்லை. என்த உயிரினத்தை தாக்கினாலும், அவையை கட்டுப்படுத்தும்வகை, ஒரு விதத்தில் வைரசுகள் இப்பாரிலுள்ள உயிர்வாழ் சூழ்நிலையையே தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக்கூட சொல்லலாம். உயிர் உள்ளதா இல்லயா என்பதையே விஞானிகள் ஒரு பக்கம் ஆராய்ச்சி செய்துகொண்டும் விவாதித்துக்கொண்டிருக்கும்பொழு
து, மற்றொரு பக்கம் வைரசுகள் இவ்வுலகின் உயிரோட்டத்திற்கு இன்றிஅமயாத அங்கமாக இருக்கின்றன. பொருளுக்கு பொருள் தரும் வைரச்! 

எழுதியவர்: ஸ்னேஹா
மொழிபெயர்ப்பாளர்: கார்த்திக்     

No comments:

Post a Comment